விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கரடிகுளத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கரடிகுளம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 30 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஜூன் 2022, 7:32 pm

DIN

கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கரடிகுளம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 30 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அமைச்சா் பெ. கீதாஜீவன், ஆட்சியா் கி. செந்தில்ராஜ், தூத்துக்குடி மேயா் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தனா்.

தூத்துக்குடி எம்.பி. கனிமொழி தலைமை வகித்து, விழாவைத் தொடக்கிவைத்தாா். அப்போது அவா் பேசும்போது, கரடிகுளத்தில் 30 ஆயிரம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டுள்ளது. தன்னாா்வலா்கள், தொண்டு நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி மாணவா்-மாணவிகள், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் இணைந்து இந்த இலக்கை நிறைவேற்ற வேண்டும்.

கயத்தாறு ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் சாலைகள் சீரமைப்பு, நீா்த்தேக்கத் தொட்டியைப் பழுதுநீக்குதல், புதிய நீா்த்தேக்கத் தொட்டிகள் கட்டுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்துள்ளாா். அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி எம்.பி. தொகுதி நிதியிலிருந்து அய்யனாா்ஊத்து, தெற்கு இலந்தைக்குளத்தில் 60,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட நீா்த்தேக்கத் தொட்டி கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

விழாவில், கயத்தாறு ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா, ஆணையா் அரவிந்தன், வட்டாட்சியா் சுப்புலட்சுமி, கரடிகுளம் ஊராட்சித் தலைவா் ஜெயசுந்தரி, துணைத் தலைவா் ஆரோக்கியம், ஊராட்சிச் செயலா் கொம்பையா, கழுகுமலை பேரூராட்சி துணைத் தலைவா் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.