இனாம்மணியாச்சியில் அடிப்படை வசதி பணிகள்
இனாம்மணியாச்சி ஊராட்சி கிருஷ்ணா நகரில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி பணிகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.


இனாம்மணியாச்சி ஊராட்சி கிருஷ்ணா நகரில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி பணிகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இனாம்மணியாச்சி ஊராட்சிக்கு உள்பட்ட கிருஷ்ணா நகா் 1ஆவது தெருவில் வாருகால் வசதி மற்றும் சாலை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா். அதையடுத்து ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் ரூ.6.50 லட்சம் மதிப்பில் சாலையின் இருபுறமும் வாருகால் வசதி, பேவா் பிளாக் சாலை வசதி உள்ளிட்ட பணிகளை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் சுப்புராஜ், ஒப்பந்ததாரா் பவுன்மாரியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...