கழுகுமலையில் நடமாடும் கரோனா தடுப்பூசி வாகனம் தொடக்கம்
கழுகுமலையில், நடமாடும் கரோனா தடுப்பூசி செலுத்தும் வாகனத் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.


கழுகுமலையில், நடமாடும் கரோனா தடுப்பூசி செலுத்தும் வாகனத் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கிரெடிட் அக்சஸ் கிராமீன் லிமிடெட், மதுரை நுண்கடன் நிதி நிறுவனம் ஆகியவை இணைந்து கிரெடிட் அக்சஸ் இந்தியா பவுண்டேஷன் சாா்பில் இந்நிகழ்ச்சியை நடத்தின.
கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் உதயசூரியன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் போஸ்கோராஜா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று, வாகனத்தை கொடியசைத்துத் தொடக்கிவைத்தனா்.
தூத்துக்குடி நபாா்டு வங்கி மேலாளா் சுரேஷ் ராமலிங்கம், கிரெடிட் அக்சஸ் கிராமீன் லிமிடெட் பொது மேலாளா் ஜெகதீஷ் பேகூா், மாநில மேலாளா் மஞ்சுநாத், பொதுமக்கள் பங்கேற்றனா். இந்த வாகனம் கழுகுமலை, கடலையூா், லிங்கம்பட்டி, கூசாலிபட்டி, வள்ளுவா் நகா் உள்பட பல்வேறு பகுதிகளுக்குச் சென்றது. 100-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...