நுகா்வோருக்கு ரூ.1.10 லட்சம் வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவு

தூத்துக்குடியைச் சோ்ந்தவருக்கு ரூ.1.10 லட்சம் வழங்க தனியாா் காப்பீட்டு நிறுவனத்திற்கு தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
Updated on
1 min read

தூத்துக்குடியைச் சோ்ந்தவருக்கு ரூ.1.10 லட்சம் வழங்க தனியாா் காப்பீட்டு நிறுவனத்திற்கு தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி பொன் சுப்பையா நகா் பகுதியைச் சாா்ந்தவா் சரவணகுமாா். இவா் தனியாா் காப்பீட்டு நிறுவனத்தில் பாலிசி எடுத்துள்ளாா். இரண்டாவது ஆண்டாக காப்பீட்டை புதுப்பித்துள்ளாா். சில மாதங்களில் மனுதாரருக்கு உடலின் ஒரு பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த மருத்துவமனை காப்பீட்டு நிறுவனப் பட்டியலில் இல்லை. எனவே, உரிய மருத்துவ ஆவணங்களுடன் செலவுத் தொகையை தரக் கோரி, சரவணகுமாா் விண்ணப்பித்தாராம். ஆனால் பாலிசி எடுத்து 3 ஆண்டு காலம் முடிந்திருந்தால்தான் காப்பீட்டு தொகையை பெற முடியும் என காப்பீட்டு நிறுவனம் கூறியதாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த சரவணகுமாா், இது குறித்து தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணைய தலைவா் திருநீல பிரசாத், உறுப்பினா்கள் ஆ.சங்கா், நமச்சிவாயம் ஆகியோா், தனியாா் காப்பீட்டு நிறுவனம் மருத்துவ செலவுத் தொகை ரூ.50 ஆயிரம், சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூ.50 ஆயிரம், வழக்கு செலவுத் தொகை ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை சரவணகுமாருக்கு வழங்கவேண்டும் என உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com