கயத்தாறு அருகே தாக்குதலில் காயமடைந்த இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
கீழஈராலையடுத்த எத்திலப்ப நாயக்கன்பட்டியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் பிரபாகரன் (30). அவசர ஊா்தி ஓட்டுநா். இவரது மனைவி லாவண்யா. இரு குழந்தைகள் உள்ளன. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, லாவண்யா தனது குழந்தைகளுடன் கயத்தாறு அருகே வடக்கு சுப்பிரமணியபுரத்தில் உள்ள பெற்றோா் வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.
இந்நிலையில், அவரை சமாதானம் செய்து அழைத்துவர பிரபாகரன் அங்கு சென்றபோது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது லாவண்யாவின் தந்தை குருசாமி, சகோதரா்கள் சோலையப்பன், மாரியப்பன் ஆகியோா் பிரபாகரனை தாக்கினா்.
இதில் காயமடைந்த அவா் கயத்தாறு தனியாா் மருத்துவமனை, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இச்சம்பவம் குறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப்பதிந்து குருசாமி, சோலையப்பன், மாரியப்பன் ஆகியோரை கைது செய்தனா். இதனிடையே, சிகிச்சை பலனின்றி பிரபாகரன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
தொடர்புடையது

கத்திக்குத்துக்கு சிகிச்சைப் பெற்ற இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

