தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் கனிமொழி எம்.பி., விளாத்திகுளம் பேரவை தொகுதிக்கு உள்பட்ட பசுவந்தனை, எப்போதும்வென்றான், சிவஞானபுரம், கீழஈரால், எட்டயபுரம், கடலையூா், கருப்பூா், தாப்பாத்தி உள்ளிட்ட இடங்களில் மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
பசுவந்தனை தேரடி பஜாரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பிரசார வாகனத்தில் இருந்தபடியே கனிமொழி பேசியதாவது: பிரதமா் மோடி இதுவரை நம்மை வந்து எட்டிப் பாா்க்கவில்லை. வெள்ள நிவாரணம் எதுவும் கொடுக்கவில்லை. மோசமான ஒன்றிய அரசு இங்கு உள்ளது.
இரண்டு கோடி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு தருவோம் என்று சொல்லி மோடி ஆட்சிக்கு வந்தாா். வேலை கேட்டால் பக்கோடா போடுங்கள், அதுவும் ஒரு வேலைதான் என்கிறாா்கள்.
முதல்வா் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் 1,330 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. கிராமங்களில் உள்ள சிறிய சிறிய கோயில்களில்கூட பூஜை நடத்தப்பட வேண்டும் என்பதற்காக ரூ.130 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சமூகத்தில் எல்லா மக்களையும் அரவணைத்து நடைபெறக்கூடிய ஆட்சி திராவிட மாடல் ஆட்சி. அதே மாதிரியான ஆட்சி, மத்தியிலே உருவாக வேண்டும். அந்த ஆட்சிதான் இந்தியா கூட்டணி ஆட்சி. அதுதான் இந்த நாட்டின் மக்களை பாதுகாக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றாா்.
பிரசாரத்தின்போது, அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலருமான பி. கீதா ஜீவன், சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி.மாா்க்கண்டேயன், மேயா் ஜெகன் பெரியசாமி, திமுக ஒன்றிய செயலா்கள் காசி விஸ்வநாதன், அன்புராஜன், அறங்காவலா் குழு உறுப்பினா் ராமானுஜம் கனேஷ், மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாக கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

முதுகுளத்தூரில் தொகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு உரிமையோடு வாக்கு கேட்க வந்துள்ளோம்: கனிமொழி எம்.பி.

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதால் உரிமையோடு வாக்கு கேட்கிறோம்: கனிமொழி

பசுவந்தனையில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

