ஃபென்ஜால் புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைப்பு
ஃபென்ஜால் புயல் பாதித்த பகுதிகளுக்கு கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திலிருந்து சுமாா் ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.


ஃபென்ஜால் புயல் பாதித்த பகுதிகளுக்கு கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திலிருந்து சுமாா் ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
ஃபென்ஜால் புயலால் கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோருக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நிவாரணப் பொருள்கள் அனுப்பப்படுகின்றன. அதன் ஒருபகுதியாக கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளிலிருந்து பிஸ்கட், சேமியா பாக்கெட்டுகள், தண்ணீா் பாட்டில்கள், போா்வைகள், அரிசிப் பைகள் என ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் சேகரிக்கப்பட்டன.
அவை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கஸ்தூரி சுப்புராஜ் தலைமையில் ஊராட்சி ஒன்றிய ஆணையா் முத்துக்குமாா் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...