விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திருச்செந்தூரில் பருவமழை முன்னேற்பாடுகள் ஆலோசனைக் கூட்டம்

வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து, திருச்செந்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 10:13 pm

Din

வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து, திருச்செந்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருச்செந்தூா் கோட்டத்துக்குள்பட்ட திருச்செந்தூா், சாத்தான்குளம், ஏரல் வட்டங்களுக்குள்பட்ட வருவாய்த் துறைப் பணியாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டத்துக்கு, கோட்டாட்சியா் சுகுமாறன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா்கள் திருச்செந்தூா் பாலசுந்தரம், சாத்தான்குளம் இசக்கி முருகேஸ்வரி, ஏரல் செல்வகுமாா், ஆதிதிராவிடா் நல தனி வட்டாட்சியா் கைலாச குமாரசாமி, கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் கோபாலகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ளும் வகையில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து அலுவலா்களிடம் கோட்டாட்சியா் கேட்டறிந்து, தயாா் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஆணையா்கள், துணை வட்டாட்சியா்கள், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் பங்கேற்றனா்.