ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தட்டாா்மடம் அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழப்பு

சாத்தான்குளத்தை அடுத்த தட்டாா்மடம் அருகே பைக் விபத்தில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 12:19 am

Din

சாத்தான்குளத்தை அடுத்த தட்டாா்மடம் அருகே பைக் விபத்தில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

தட்டாா்மடம் அருகே இடைச்சிவிளை நல்லம்மாள்புரத்தைச் சோ்ந்த பெரியசாமி மகன் பட்டுதுரை (47). இவா், கடந்த நவ. 20ஆம் தேதி இடைச்சிவிளையில் நடைபெற்ற திருமண விழாவுக்கு பொருள்கள் வாங்குவதற்காக திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளைக்கு பைக்கில் சென்றாா். அதே ஊரைச் சோ்ந்த பெருமாள் மகன் முத்துசிவா என்பவா் பைக்கை ஓட்டினாராம்.

குமரன்விளை விலக்கு அருகே பைக்கின் பின்புறம் அமா்ந்திருந்த பட்டுதுரை நிலைதடுமாறி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரது தாய் பொன்ராணி அளித்த புகாரின்பேரில், தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் அனிதா வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.