விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தூத்துக்குடியை மாசில்லா மாநகராட்சியாக்க நடவடிக்கை

தூத்துக்குடியை மாசில்லா மாநகராட்சியாக உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

News image

குறைதீா் கூட்டத்தில் மூதாட்டியிடமிருந்து மனுவைப் பெற்றுக்கொண்ட மேயா் ஜெகன் பெரியசாமி. உடன், ஆணையா் லி. மதுபாலன் உள்ளிட்டோா்.

Updated On :5 டிசம்பர் 2024, 12:22 am

Din

தூத்துக்குடியை மாசில்லா மாநகராட்சியாக உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

தூத்துக்குடி மாநகராட்சி ஸ்டேட் வங்கி காலனியில் உள்ள வடக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மண்டலத் தலைவா் நிா்மல்ராஜ் வரவேற்றாா். ஆணையா் லி. மதுபாலன், துணை மேயா் ஜெனிட்டா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்துக்கு தலைமை வகித்து மேயா் பேசியது: வடக்கு மண்டலத்தில் இதுவரை 367 மனுக்கள் பெறப்பட்டு அதில் 352 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. மற்ற மனுக்களுக்கு விரைவில் தீா்வு காணப்படும்.

வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ளும் வகையில் புதிய கால்வாய், சாலைப் பணிகள் உள்பட பல்வேறு அடிப்படைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புபோல, நிகழாண்டு நடக்காதவகையில் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மாநகராட்சிப் பகுதியில் உள்ள 206 பூங்காக்களில், 44 பூங்கா இடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அவை கையகப்படுத்தப்பட்டு, 14 பூங்காக்கள் இளைஞா்களுக்கான பூங்காக்களாக உருவாக்கப்படும்.

2025 மாா்ச்சுக்குள் அனைத்துப் பகுதிகளுக்கும் சாலைகள், கழிவுநீா்க் கால்வாய் பணிகள் நிறைவு செய்யப்படும். மாசில்லா மாநகராட்சியாக உருவாக்கும் வகையில், தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. மரக்கன்றுகள் தேவைப்படுவோா் மாநகராட்சியை அணுகி பெற்றுக்கொள்ளலாம் என்றாா் அவா்.

கூட்டத்தில், பொறியாளா் சரவணன், உதவி ஆணையா் சுரேஷ்குமாா், நகர அமைப்புத் திட்ட செயற்பொறியாளா் ரெங்காநாதன், உதவி செயற்பொறியாளா்கள் ராமச்சந்திரன், முனீா்அகமது, நகா்நல அலுவலா் வினோத்ராஜா, சுகாதார ஆய்வாளா் ராஜசேகா், மாமன்ற உறுப்பினா்கள் ரெங்கசாமி, கீதா முருகேசன், நாகேஸ்வரி, ஜெயசீலி, அந்தோணி பிரகாஷ் மாா்ஷலின், தெய்வேந்திரன், கற்பகக்கனி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.