விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

உண்டியல் பணம் திருட்டு வழக்கு: கைதான பெண் காவலா் பணியிடை நீக்கம்

சங்கரநாராயண சுவாமி கோயிலில் உண்டியல் பணத்தைத் திருடியதாக கைது செய்யப்பட்ட தூத்துக்குடி தென்பாகம் பெண் காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 12:21 am

Din

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயிலில் உண்டியல் பணத்தைத் திருடியதாக கைது செய்யப்பட்ட தூத்துக்குடி தென்பாகம் பெண் காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

சங்கரநாராயண சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை பணம் எண்ணும் பணி கடந்த நவ. 26இல் நடைபெற்றது. அப்போது, தூத்துக்குடி தென்பாகம் காவலா் மகேஸ்வரி (42) உள்ளிட்ட 4 பெண்கள் பணத்தைத் திருடியது தெரியவந்தது. புகாரின்பேரில், சங்கரன்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து 4 பேரையும் கைது செய்தனா்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். ஸ்ரீனிவாசன் விசாரணை நடத்தி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜானிடம் அறிக்கையை சமா்ப்பித்தாா். அதன்பேரில், அவா் காவலா் மகேஸ்வரியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.