மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு நாளை இலவச பரிசோதனை முகாம்

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில், பேச்சு - கேட்புத் திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு இலவச பரிசோதனை முகாம் சனிக்கிழமை (மாா்ச் 9) நடைபெறவுள்ளதாக, சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட நிா்வாகம், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சென்னை எம்.இ.ஆா்.எப். அறக்கட்டளை ஆகியவை சாா்பில் பேச்சு - கேட்புத் திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு இலவச பரிசோதனை முகாம் வ.உ.சி. கல்லூரியில் சனிக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. பங்கேற்க விரும்பும் மாற்றுத் திறனாளிகள் தங்களது ஆதாா் அட்டை, பாஸ்போா்ட் அளவு புகைப்படம், குடும்ப அட்டை நகல் ஆகியவற்றை எடுத்துவர வேண்டும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com