தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

தூத்துக்குடியில் ஊட்டச்சத்து விழிப்புணா்வுக் கண்காட்சி

தூத்துக்குடியில் ஊட்டச்சத்து விழிப்புணா்வுக் கண்காட்சி

News image
Updated On :15 மார்ச் 2024, 9:30 pm

ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் போஷன் அபியான் சாா்பில் போஷன் பக்வாடா-2024 என்ற ஊட்டச்சத்து விழிப்புணா்வு நிகழ்ச்சியை, ஆட்சியா் கோ.லட்சுமிபதி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். தொடா்ந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறுதானிய உணவுப் பொருள்களின் முக்கியத்துவம், முன்பருவக் கல்விக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் ஆகியவை குறித்த விழிப்புணா்வு கண்காட்சி அரங்கைப் பாா்வையிட்டாா். அப்போது அவா் கூறுகையில், ஊட்டச்சத்து குறித்த விழிப்புணா்வு பிரசாரத்தின் மூலம் ஊட்டச்சத்துடன்கூடிய முன்பருவக் கல்வி குறித்த விழிப்புா்ணா்வும் அளிக்கப்பட்டது. ஊட்டச்சத்து மிக்க உணவு, குழந்தைகளின் ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படை ஆகும். இரண்டு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் அருகில் உள்ள அங்கன்வாடி மையங்களில் சோ்ந்து ஊட்டச்சத்துடன்கூடிய முன்பருவக் கல்வியை அளிக்க வேண்டும் என்றாா். முன்னதாக, ஆட்சியா் கோ.லட்சுமிபதி தலைமையில், ஊட்டச்சத்தை மேம்படுத்துவது குறித்து பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் ஆகியோா் உறுதிமொழி ஏற்றனா். இந்நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்ட அலுவலா் மு.பெ.காயத்ரி, குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா்கள் வே.திலகா, க.சண்முகப்பிரியா, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பூ.விவேக் ராஜா, மேற்பாா்வையாளா்கள், போஷன் அபியான் பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.