

வீரசக்கதேவி கோயில் திருவிழாவை முன்னிட்டு, ஓட்டப்பிடாரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள 58 டாஸ்மாக் மதுக்கடைகளை வெள்ளிக்கிழமை மூட மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி கோவில் திருவிழா வெள்ளி, சனி (மே 10, 11) ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறவுள்ளது. இதையடுத்து ஓட்டப்பிடாரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 58 அரசு மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்களை வெள்ளிக்கிழமை (மே 10) ஒரு நாள் மட்டும் மூட உத்தரவிடப்படுகிறது.
இந்த தினத்தில் மது விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபாட்டில்களை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

மகாவீா் ஜெயந்தி : மாா்ச் 31-இல் மதுக்கடைகள் மூடல்

மகாவீரா் ஜெயந்தி: மாா்ச் 31-இல் மதுக்கடைகள் மூடல்

குறிஞ்சி மாரியம்மன் கோயில் திருவிழா; பக்தா்கள் பால் குட ஊா்வலம்

ஆறகளூா் கோயிலில் தோ்த் திருவிழா முகூா்த்தக்கால்
வீடியோக்கள்
Jawahirullah interview | அதிமுக, பாஜகவுக்கு உதவ இறக்கிவிடப்பட்டவர் Vijay | Dinamani | Election 2026
தினமணி வீடியோ செய்தி...

#ipl2026 | சிஎஸ்கேவில் சஞ்சு சாம்சன், ராஜஸ்தானில் ஜடேஜா: இதுதாண்டா ஆட்டம்! | MS Dhoni | RR vs CSK |
தினமணி வீடியோ செய்தி...

164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK candidates | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

முக்கிய வீரர்கள் விலகல்: ஐபிஎல் சுவாரசியமாக இருக்குமா?
தினமணி வீடியோ செய்தி...

