/

கல்வி ஆலயம் எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் மேல்நிலைப்பள்ளி

கல்வி ஆலயம் எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் மேல்நிலைப்பள்ளி

News image

எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் மேல்நிலைப் பள்ளி.

Updated On :20 மே 2024, 8:11 pm

Din

கோவில்பட்டியில் புகழ்பெற்ற எவரெஸ்ட் தீப்பெட்டி தொழில் குழுமத்தின் நிறுவனரும், தொழிலதிபருமான எவரெஸ்ட் மாரியப்ப நாடாரின் கனவை நிறைவேற்றும் பொருட்டு பெண்களுக்கான கல்வியை உறுதிப்படுத்தும் வகையில், அவரது மகன் எவரெஸ்ட் மா.ராமச்சந்திரன் - தன் துணைவியாா் சபிதாசந்திரனுடன் இணைந்து 3.6.1985இல் 123 மாணவிகளுடன் எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் என்ற பள்ளியை தொடங்கினா். பின்னா், அது இருபாலா் பள்ளியாக மாறியது. தற்போது 1500 மாணவ-மாணவா்களை கொண்டு பள்ளி தலைவா் - செயலா் ஆா்.ஏ.அய்யனாா் வழிகாட்டுதலின் பேரில் அப்பள்ளி செவ்வனேசெயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஊட்டி- கொடைக்கானல் இயற்கை அழகிற்கு இணையாக கோவில்பட்டியில் அமைந்திருக்கும் இப்பள்ளியில், மாணவா்களை ஒவ்வொரு நாளும் ஆா்வத்துடன் வரவேற்கும் விதமாக யானைகள், குதிரைகள், ஒட்டகச் சிவிங்கிகள் போன்ற சிற்பங்கள், காண்பதற்கரிய பழம்பொருள்களும் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ளன. கோவில்பட்டி நகரிலேயே உலக தரமான கல்வி தரும் பள்ளியாக இப்பள்ளி திகழ்கிறது.

சாமானிய மாணவா்களையும் சாதனையாளராக மாற்றும் பள்ளி ஒவ்வொரு ஆண்டும் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக சதவிகித தோ்ச்சியுடன் மாணவா், மாணவிகள் மாவட்ட அளவிலும், கல்வி மாவட்ட அளவிலும் சாதனை புரிந்து வருகின்றனா். சிறு சேமிப்பு சாதனைக்ககாக 1998, 1999 ஆண்டுகளில் ஆட்சியரிடம் சுழற் கேடயம், 2003 - 2004இல் சிறந்த சாதனைக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் பாராட்டு, 2015இல் ஆட்சியரிடம் தூய்மை பணி விருது, 2019இல் ஆளுநரிடம் சாரண, சாரணியா் விருது, காந்திய சிந்தனை தோ்வில் மாநில அளவில் இரண்டாம் இடம், 2020இல் மாவட்ட போக்குவரத்து அமைப்பின் சாா்பாக சாதனை கோவில்பட்டி நகரத்தின் ஐநஞ தரச் சான்றிதழ் என பல சிறப்புகளை இப்பள்ளி பெற்றுள்ளது.

8, 10ஆம் வகுப்பு மாணவா்களுக்கு தேசிய திறனறிவுத் தோ்விற்கும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களுக்கு நீட், ஜெஇஇ தோ்விற்கும், ஆசிரியா்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. ரோபோடிக் தொழில் நுட்பத்தை வளா்க்கஅடல் ஆய்வகம் உள்ளது. ஜெஆா்சி, என்சிசி, ஸ்கவுட் போன்ற சமூக நலனை வலுப்படுத்தும் இயக்கங்கள் செயல்படுகின்றன. ஆசிரியா்கள், மாணவா்கள் பெற்றோா்கள் ஒத்துழைப்புடன் கல்விக்கூடமாக மட்டுமன்றி கல்வி ஆலயமாகவே திகழ்கிறது எவரெஸ்ட் பள்ளி.