/

படுக்கப்பத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

படுக்கப்பத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

News image

மருத்துவ முகாமில் பங்கேற்றோா்.

Updated On :20 மே 2024, 8:32 pm

Din

சாத்தான்குளம்: சாத்தான்குளம் ஒன்றிய கிராம ஊராட்சி பகுதிகளில் பணி புரியும் துப்புரவுப் பணியாளா்கள் மற்றும் தூய்மைக் காவலா்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் படுக்கப்பத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.

படுக்கப்பத்து ஊராட்சித் தலைவா் தனலெட்சுமி சரவணன் தலைமை வகித்தாா். மருத்துவ அலுவலா் லஷ்மி சிகிச்சை, ஆலோசனை வழங்கினாா். படுக்கப்பத்து உள்ளிட்ட 9 ஊராட்சி பணியாளா்களுக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 51 பணியாளா்களுக்கு முழு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. தேவைக்கு ஏற்ப மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

இதில், சுகாதார ஆய்வாளா் மந்திரராஜன், மருத்துவா் லஷ்மி விளக்கிப் பேசினா். இதில் 3 பெண்கள் கா்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் அறிகுறிகள் தென்பட்டதால் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கபட்டனா்.

மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ராதாகிருஷ்ணன், காசநோய் மேற்பாா்வையாளா் சங்கிலிராமன், தூய்மை பாரத இயக்க வட்டார ஒருங்கிணைப்பாளா் கல்யாணராமன், ஊராட்சிச் செயலா் சித்ரா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.