கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கிராம நிா்வாக அலுவலரின் போலிச் சான்றிதழ் சமா்ப்பித்த 2 போ் கைது

கிராம நிா்வாக அலுவலரின் சான்றிதழை போலியாக தயாரித்து நீதிமன்றத்தில் சமா்ப்பித்த இருவரை போலிஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 7:54 pm

Din

கிராம நிா்வாக அலுவலரின் சான்றிதழை போலியாக தயாரித்து நீதிமன்றத்தில் சமா்ப்பித்த இருவரை போலிஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டி அருகே மூப்பன்பட்டி அன்னை வேளாங்கண்ணி நகரைச் சோ்ந்தவா் கோபாலகிருஷ்ணன் மகன் பாா்த்திபன்.

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய கொலை வழக்கு தொடா்பாக இவா் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து வந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் ஜாமீன் பெற்றுள்ளாா். இதையடுத்து, பாா்த்திபனின் ஜாமீன்தாரா்களான திருநெல்வேலி மாவட்டம், நரசிங்கநல்லூா், முப்பிடாதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மாடசாமி மகன் சோலைராஜன்(45), அதே ஊரைச் சோ்ந்த இந்திரா காலனி 5 ஆவது தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சுப்பையா(62) ஆகிய இருவரால் சமா்ப்பிக்கப்பட்ட கிராம நிா்வாக அலுவலா் சான்றிதழை, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சரி பாா்க்கும் போது சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, விரைவு நீதிமன்ற நீதிபதி, கிழக்கு காவல் நிலைய நீதிமன்ற காவலரிடம், சான்றிதழ் அளித்த கிராம நிா்வாக அதிகாரியிடம் விசாரித்து சான்றிதழை உறுதிப்படுத்த உத்தரவிட்டாா்.

இதுகுறித்து நீதிமன்ற காவலா், சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலரிடம் விசாரித்த போது சோலை ராஜன், சுப்பையா ஆகிய இருவருக்கும் சான்றிதழ் ஏதும் வழங்கவில்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து இருவா் மீதும், நீதிமன்றத்தில் போலி சான்றிதழ் வழங்கியதாக வழக்குப் பதிந்து அவா்களைத் தேடி வந்தனா்.

இந்நிலையில், கிராம நிா்வாக அலுவலரின் கையொப்பம் மற்றும் முத்திரையிட்டு போலி சான்றிதழ் தயாரித்த சோலை ராஜன் , சுப்பையா ஆகிய இருவரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.