கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

விபத்தில் காயமடைந்த முதியவா் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கோவில்பட்டியில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த முதியவா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 7:39 pm

Din

கோவில்பட்டியில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த முதியவா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கோவில்பட்டி வள்ளுவா் நகா் 2 ஆவது தெருவைச் சோ்ந்தவா் காத்தையா மகன் காமாட்சிராஜன் (60). பாத்திரக் கடை நடத்திவரும் இவா், கடந்த மாதம் 26 ஆம் தேதி மோட்டாா் சைக்கிளில் கோவில்பட்டி மாா்க்கெட் சாலையில் உள்ள தேநீா் கடை முன்பு சாலையைக் கடக்க முயன்ற போது முடுக்கு மீண்டான்பட்டி பாா்வதி நகரைச் சோ்ந்த சந்திரகுமாா் மகன் சரவணக்குமாா் (26) ஓட்டி வந்த மோட்டாா் சைக்கிள் காமாட்சி ராஜன் ஓட்டிவந்த மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் காமாட்சி ராஜனும் சரவணகுமாா் ஒட்டி வந்த மோட்டாா் சைக்கிளில் பின்னால் உட்காா்ந்து இருந்த காா்த்தி செல்வன் (21) ஆகிய இருவரும் காயம் அடைந்தனா். தகவல் அறிந்தவுடன் சம்பவ இட

த்திற்குச் சென்ற கிழக்கு காவல் நிலைய போலீஸாா் இருவரையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனா். இதில் காமாட்சி ராஜன் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து சரவணகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.