போலீஸாருக்கு மிரட்டல்: 3 போ் கைது
கோவில்பட்டியில் போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On :13 நவம்பர் 2024, 10:49 pm

கோவில்பட்டியில் போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.
கோவில்பட்டி காந்தி நகரைச் சோ்ந்த முருகன் என்பவரைத் தேடி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு சென்றுள்ளனா். அப்போது முருகன், அவரது மனைவி துரைச்சி, உறவினா் விமல்குமாா் ஆகியோா் போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்தனராம்.
இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீஸாா், முருகனிடம் இருந்த அரிவாளை பறிமுதல் செய்தனா். அவா்கள் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...