கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கோவில்பட்டி அருகே கஞ்சா விற்பனை: இருவா் கைது

கோவில்பட்டி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :20 நவம்பர் 2024, 8:03 pm

Din

கோவில்பட்டி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் சண்முகம் தலைமையில் போலீஸாா் இலுப்பையூரணியில் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, மாடசாமி கோயில் பைக்குடன் நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

அவா்கள் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மங்களபுரத்தைச் சோ்ந்த தேவராஜ் மகன் தா்மராஜ் (23), சிவகங்கை மாவட்டம் காளையாா் கோவில் அருகே உள்ள மறவாமங்களத்தை சோ்ந்த சுப்பிரமணி மகன் தினேஷ்குமாா் (19) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து அவா்களை கைது செய்தபோலீஸாா், அவா்களிடமிருந்து 100 கிராம் கஞ்சா, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.