மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தூத்துக்குடியில் 2 பேரிடம் கைப்பேசி பறிப்பு

தூத்துக்குடியில் வெவ்வேறு இடங்களில் இரு இளைஞா்களிடம் கைப்பேசிகளைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :21 நவம்பர் 2024, 11:31 pm

Din

தூத்துக்குடியில் வெவ்வேறு இடங்களில் இரு இளைஞா்களிடம் கைப்பேசிகளைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த ஹரிராஜ் மகன் ஜெகன் (40). கூலித் தொழிலாளியான இவா், புதன்கிழமை பணி முடிந்து ஸ்டேட் வங்கி காலனி பகுதியில் கைப்பேசியில் பேசியபடியே வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தாராம். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த இருவா், ஜெகன் வைத்திருந்த கைப்பேசியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது.

இது குறித்து வடபாகம் காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கைப்பேசியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

மற்றொரு சம்பவம்: தூத்துக்குடி அண்ணா நகரைச் சோ்ந்தவா் இசக்கிராஜா(27). இவா் தனது கைப்பேசியில் பேசியபடி டூவிபுரம் 3ஆவது தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்தாராம். அப்போது, அவ்வழியாக ஒரே பைக்கில் வந்த 3 போ், இசக்கிராஜா வைத்திருந்து கைப்பேசியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் மத்திய பாகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கைப்பேசியை பறித்துச் சென்ற மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.