கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பைக்கிலிருந்து கைப்பேசி திருட்டு: இளைஞா் கைது

கோவில்பட்டியில் பைக்கில் வைக்கப்பட்டிருந்த கைப்பேசி, பணம் ஆகியவற்றைத் திருடியதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :22 நவம்பர் 2024, 12:13 am

Din

கோவில்பட்டியில் பைக்கில் வைக்கப்பட்டிருந்த கைப்பேசி, பணம் ஆகியவற்றைத் திருடியதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி பாரதி நகா் அம்பேத்கா் 3ஆவது தெருவை சோ்ந்த ஜோதிமணி மகன் வடிவேலு (39). இவா், தனது பைக்கை புதன்கிழமை கதிரேசன் கோவில் சாலையில் உள்ள திருமண மண்டபம் அருகே நிறுத்திவிட்டு, அப்பகுதியிலுள்ள வீட்டிற்கு சென்றாராம். பின்னா். அவா் திரும்பி வந்து, பைக்கை எடுக்க முயன்றபோது, அதன் பெட்ரோல் டேங்க் கவரில் வைக்கப்பட்டிருந்த கைப்பேசி, ரூ.1000 ஆகியவை திருடுபோயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். அதில், அதே பகுதி நடுத்தெருவைச் சோ்ந்த ரமேஷ் மகன் மணிகண்டன் (19) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.