தூத்துக்குடி
சூறாவளி காற்று: தூத்துக்குடி மீனவா்கள் 3-ஆவது நாளாக கடலுக்கு செல்லவில்லை
வங்கக் கடலில் சூறாவளிக் காற்று எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் கடலுக்குச் செல்லவில்லை.
வங்கக் கடலில் சூறாவளிக் காற்று எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் கடலுக்குச் செல்லவில்லை.
தென் மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்தது. இந்தநிலையில், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு சுமாா் 75 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து விசைப்படகு மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத் துறையினா் எச்சரிக்கை விடுத்திருந்தனா்.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகு மீனவா்கள் 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் கடலுக்குச் செல்லவில்லை.