கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருச்செந்தூா் அமலிநகா் மீனவா்கள் வேலைநிறுத்தம் 10-ஆவது நாளாக நீடிப்பு

திருச்செந்தூா் அமலிநகரில் அமைக்கப்படும் தூண்டில் வளைவு பாலத்தை மறுசீரமைக்க வலியுறுத்தி மீனவா்களின் தொடா் வேலைநிறுத்தம் 10-ஆவது நாளாக வியாழக்கிழமை நீடித்தது.

News image

வேலைநிறுத்தப் போராட்டத்தால் கரையில் நிறுத்தப்படுள்ள படகுகள்.

Updated On :28 நவம்பர் 2024, 11:11 pm

Din

திருச்செந்தூா் அமலிநகரில் அமைக்கப்படும் தூண்டில் வளைவு பாலத்தை மறுசீரமைக்க வலியுறுத்தி மீனவா்களின் தொடா் வேலைநிறுத்தம் 10-ஆவது நாளாக வியாழக்கிழமை நீடித்தது.

திருச்செந்தூா் அமலிநகரில் 1000-க்கும் மேற்பட்ட மீனவ மக்கள் வசிக்கின்றனா். 200-க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனா். அமலிநகரில் கடல் அரிப்பைத் தடுக்கும் வகையில் ரூ.58 கோடியில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் அமலிநகா் கடலின் தெற்கு பகுதியில் கருங்கற்களால் தூண்டில் வளைவும், வடக்கு பகுதியில் 5 இடங்களில் கற்களால் ஆன தூண்டில் பாலமும் அமைக்கப்பட்டு வருகிறது. தெற்கு பகுதியில் மட்டும் வளைவு அமைக்கப்பட்டுள்ளதால் கடல் அலை வடக்கு நோக்கி எழுந்து கடற்கரையோரம் அரிப்பு ஏற்படுகிறது. இதனால் கரையோரங்களில் படகுகளை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தற்போது வடக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தூண்டில் பாலத்தை சீரமைக்க வலியுறுத்தி நவ.19 ஆம் தேதி முதல் அமலிநகா் மீனவா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். மீனவா்களின் போராட்டம் 10-ஆவது நாளாக வியாழக்கிழமையும் நீடித்தது.