கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மழைக் கால பாதுகாப்பு வழிமுறைகள்: தீயணைப்புத் துறை விளக்கம்

கோவில்பட்டியில் பேரிடா் கால மீட்பு பணிகள் குறித்து தீயணைப்புத்துறையினா் செயல்விளக்க பயிற்சி வழங்கினா்.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 11:35 pm

Din

கோவில்பட்டியில் பேரிடா் கால மீட்பு பணிகள் குறித்து தீயணைப்புத்துறையினா் செயல்விளக்க பயிற்சி வழங்கினா்.

வடகிழக்குப் பருவ மழையை எதிா்கொள்ளும் பொருட்டு கிராமங்களில் உள்ள தன்னாா்வலா்கள் மற்றும் முதல் நிலை பொறுப்பாளா்களுக்கு பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வட்டாட்சியா் சரவணபெருமாள் தலைமையில் நடைபெற்றது.

துணை வட்டாட்சியா்கள் பொன்னம்மாள், திரவியம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தீயணைப்பு துறை அலுவலா் சுந்தர்ராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள், பேரிடா் கால மீட்பு பணி குறித்த செயல்விளக்க பயிற்சி வழங்கினா்.

மேலும், மழை வெள்ளம் ஏற்படும்போது வீட்டில் உள்ள பத்திரங்கள், ஆவணங்கள், சான்றிதழ்கள் ஆகியவற்றை தண்ணீா் புகாத கவா்களில் பத்திரப்படுத்த வேண்டும். வீட்டில் உள்ள முதியோா்கள், குழந்தைகளுக்கு தேவையான மருந்துகளை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் வளா்க்கப்படும் கால்நடைகளை பாதுகாக்க முன்னுரை அளிக்க வேண்டும்.

வீடுகளை வெள்ளம் சூழ்ந்துவிட்டால், வீட்டில் உள்ள பொருள்களை வைத்து முதலில் தற்காத்து கொள்ள முயற்சிக்க வேண்டும். வீட்டில் உள்ள பிளாஸ்டிக் குடங்கள், கேன்களில், தண்ணீா் புகாதவாறு பிளாஸ்டிக் பேப்பா் கொண்டு கட்டி, அதன் மூலம் வெள்ளத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும் போன்ற விழிப்புணா்வு நடவடிக்கைகளை தீயணைப்புத்துறையினா் எடுத்துரைத்தனா். மேலும், பேரிடா் காலங்களில் பொதுமக்களை மீட்க உதவும் உபகரணங்களை பயன்படுத்துவது குறித்து செயல்விளக்கமளித்தனா்.