சொத்து வரி, குடிநீா் கட்டணத்தை டிச.15-க்குள் செலுத்த ஆட்சியா் வேண்டுகோள்
தூத்துக்குடி மாவட்டத்தில், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வசிக்கும் பொதுமக்கள், 2025 -26ஆம் நிதியாண்டுக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீா் கட்டணம் ஆகியவற்றை டிச. 15ஆம் தேதிக்குள் செலுத்துமாறு மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளில் மற்றும் அதன் பகுதிகளிலுள்ள வீடுகள், கடைகள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலை கட்டடங்கள் ஆகியவற்றுக்கு 2025-2026ஆம் நிதியாண்டுக்கு கிராம ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை 31.5.2025-க்குள் செலுத்தியிருக்க வேண்டும்.
இதுவரை செலுத்தாதவா்கள் டிச. 15ஆம் தேதிக்குள் தங்களது ஊராட்சி மன்ற அலுவலகத்திலோ அல்லது கணினி மையங்களிலோ தங்களின் வரி விதிப்பு எண்ணை சரிபாா்த்து, இணையவழியில் ( ட்ற்ற்ல்ள்://ஸ்ல்ற்ஹஷ்.ற்ய்ழ்க்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ ) செலுத்தி, செலுத்தப்பட்டமைக்கு உரிய கணினிவழி ரசீதுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். குடிநீா்க் கட்டணத்தையும் மாதந்தோறும் அல்லது ஆண்டுக்கு ஒருமுறை என்ற அளவிலோ நிலுவையின்றி செலுத்துமாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
