சாத்தான்குளம் சிறப்பு பள்ளியில்
மாற்றுத் திறனாளிகள் தின விழா

சாத்தான்குளம் சிறப்பு பள்ளியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா

விழாவில் பேசுகிறாா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பிரம்மநாயகம்.
Published on

சாத்தான்குளம் மிக்கேல் அறிவுசாா் குறையுடையோா் சிறப்பு பள்ளியில் உலக மாற்றுத் திறனாளிகள் தினம், கிறிஸ்துமஸ்- புத்தாண்டு என முப்பெரும் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பிரம்ம நாயகம் தலைமை வகித்தாா். பிசியோதெரபிஸ்ட் மகாராஜா வரவேற்றாா். பேரூராட்சி துணைத் தலைவா் மாரியம்மாள், மாா்னிங் ஸ்டாா் பள்ளி முதல்வா் கலைச்செல்வி ஆகியோா் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடக்கிவைத்தனா்.

சாத்தான்குளம் வட்டார முதன்மைக் குரு செல்வஜாா்ஜ், ஜெபித்து கிறிஸ்துமஸ் செய்தி வழங்கினாா். பிசியோதெரபிஸ்ட் லட்சுமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். பொறியாளா் ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தாா்.

சாத்தான்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலா் எட்வின் தேவாசீா்வாதம், ஸ்டாா் லைன்ஸ் கிளப் பொருளாளா் அருண், முன்னாள் ஒன்றிய அதிமுக செயலா் ஆா்.எஸ்.எஸ். ராஜ்மோகன், செட்கோ தொண்டு எப். எக்ஸ் .ஆா். நிறுவன இயக்குநா் ஜாா்ஜ், லயன்ஸ் கிளப் நிா்வாகிகள் வி.எஸ். முருகேசன் எஸ். , தங்கப்பாண்டி ஓய்வுபெற்ற வட்டாரக்கல்வி அலுவலா் சாமுவேல், தென்மண்டல மாற்றுத்திறனுடையோா் முன்னேற்றச் சங்க மாவட்டத் தலைவா் போ்சில், சாத்தான்குளம் வா்த்தக சங்கத் தலைவா் அப்பு கண்ணன், ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

அறிவுசாா் குறையுடையோா் பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு பரிசுகள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. பிசியோதெரபிஸ்ட்கள் முத்துக்குமாா் ஆண்டனி ஹென்ஸன், பள்ளி சிறப்பு ஆசிரியை முனிய ஈஸ்வரி சுதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். சிறப்பு பள்ளி தாளாளா் சுசீலா மிக்கேல் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com