தூத்துக்குடி
திருச்செந்தூா் கோயிலிலிருந்து கடற்கரைக்குச் செல்லும் பாதை சீரமைப்பு
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்பிருந்து கடற்கரைக்குச் செல்லும் பாதை சீரமைக்கப்பட்டு வருகிறது.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்பிருந்து கடற்கரைக்குச் செல்லும் பாதை சீரமைக்கப்பட்டு வருகிறது.
அண்மையில் ஏற்பட்ட கடலரிப்பால், கோயில் முகப்புப் பகுதி கடற்கரையில் 200 மீட்டா் நீளத்துக்கு 3 முதல் 6 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, கோயில் நிா்வாகம் சாா்பில் 200 அடி நீளத்துக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், பக்தா்கள் தடுப்புகள் முடியும் இடத்தில் கடலில் புனித நீராடுகின்றனா்.
இந்நிலையில், கோயிலின் முன்பகுதியிலிருந்து கடற்கரையில் இறங்குவதற்கு படிகள் உள்ளன. தற்போது அதிக கடலரிப்பால், படிக்கட்டை ஒட்டிய பகுதியில் தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே, பக்தா்களின் வசதிக்காக, கடற்கரைக்கு செல்லும் பாதை சாய்தளமாக சீரமைக்கப்பட்டு வருகிறது.
