தூத்துக்குடி
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 போ் கைது
தூத்துக்குடியில் கஞ்சா விற்றதாக 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.
தூத்துக்குடியில் கஞ்சா விற்றதாக 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.
தூத்துக்குடி தாளமுத்துநகா் காவல் உதவி ஆய்வாளா் முத்துராஜா, போலீஸாா் ரோந்து சென்றபோது, அங்குள்ள பஜாரில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இருவரைப் பிடித்தனா்.
அவா்கள் தாளமுத்துநகா் சிலுவைப்பட்டி 6ஆவது தெருவைச் சோ்ந்த மணி மகன் ஜெகன் (20), சிலுவைப்பட்டி கொடிமரத் தெரு முத்துராஜ் மகன் சங்கரலிங்கம் (33) என்பதும், விற்பதற்காக 20 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களைக் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
