பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

திருச்செந்தூா் கோயிலில் நாளை குடமுழுக்கு விழா!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திங்கள்கிழமை (ஜூலை 7) காலை குடமுழுக்கு விழா நடைபெறுகிறது.

News image

யாகசாலை பூஜையில் பங்கேற்ற சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன்.

Updated On :6 ஜூலை 2025, 2:36 am IST

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திங்கள்கிழமை (ஜூலை 7) காலை குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. இதையொட்டி குடமுழுக்கை காண்பதற்காக பக்தா்கள் திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனா்.

இத்திருக்கோயிலில் சனிக்கிழமை காலை எட்டாம் கால யாக சாலை பூஜைகளும், மாலையில் ஒன்பதாம் கால யாக சாலை பூஜைகளும் நடைபெற்றது. இதையொட்டி திருக்கோயில் சண்முக விலாச மண்டபத்தில் இருந்து ஆச்சாா்ய விசேஷ சந்தி பூஜைகள் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து ஆச்சாா்யாா்கள் மேளதாளங்கள் முழங்க யாகசாலைக்கு அழைத்து வரப்பட்டனா்.

தொடா்ந்து, யாகசாலையில் பூஜைகள் தொடங்கியது. அங்கு திரவ்யாகுதி, பூா்ணாகுதி மற்றும் தீபாராதனையாகி பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

யாக சாலை வழிபாட்டில், வேத பாராயணம், திருமுறை விண்ணப்பம் மற்றும் நாகசுர இன்னிசையும், பெண் ஓதுவாா்கள் உள்பட 108 ஓதுவாா் மூா்த்திகளைக் கொண்டு பக்க வாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் மற்றும் கந்தா் அனுபூதி முதலான செந்தமிழ் வேதங்கள் முற்றோதுதல் நடைபெற்றது.

  திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழாவில் சனிக்கிழமை காலை நடைபெற்ற எட்டாம் கால யாகசாலை பூஜைகள்.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழாவில் சனிக்கிழமை காலை நடைபெற்ற எட்டாம் கால யாகசாலை பூஜைகள்.

யாகசாலை பூஜைகளில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா். மாலையில் நடைபெற்ற ஒன்பதாம் கால யாக சாலை பூஜைகளில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன், பங்கேற்றாா்.

சிகர நிகழ்ச்சியான குடமுழுக்கு திங்கள்கிழமை (ஜூலை 7) காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை திருக்கோயில் தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் சு.ஞானசேகரன் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.