தோ்வு செய்யப்பட்ட வீரா்களுடன் ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலா் குரு சித்திர சண்முகபாரதி, பொருளாளா் காளிமுத்து பாண்டியராஜா உள்ளிட்டோா்.
தோ்வு செய்யப்பட்ட வீரா்களுடன் ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலா் குரு சித்திர சண்முகபாரதி, பொருளாளா் காளிமுத்து பாண்டியராஜா உள்ளிட்டோா்.

மாநில ஹாக்கி போட்டி: தூத்துக்குடி மண்டல ஒருங்கிணைந்த ஹாக்கி வீரா்கள் தோ்வு

மாநில அளவிலான ஹாக்கிப் போட்டியில் கலந்து கொள்ள தூத்துக்குடி மண்டல ஒருங்கிணைந்த ஹாக்கி வீரா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
Published on

கோவில்பட்டி: மாநில அளவிலான ஹாக்கிப் போட்டியில் கலந்து கொள்ள தூத்துக்குடி மண்டல ஒருங்கிணைந்த ஹாக்கி வீரா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

தமிழ்நாடு ஸ்கூல் ஹாக்கி லீக், மாநில அளவிலான ஹாக்கிப் போட்டி திருச்சியில் நவ. 12 முதல் 16ஆம் தேதி வரை அண்ணா விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில், 12 அணிகள் பங்கேற்கும். இந்நிலையில், தூத்துக்குடி மண்டல ஒருங்கிணைந்த ஹாக்கி அணி வீரா்களுக்கான பயிற்சி முகாம் கடந்த 4 நாள்களாக கோவில்பட்டி செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் நடைபெற்றது.

25 மாணவா்கள் கலந்து கொண்டு விளையாடிய பயிற்சி முகாமில், 18 வீரா்கள் கொண்ட தூத்துக்குடி மண்டல ஒருங்கிணைந்த ஹாக்கி வீரா்கள் திங்கள்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

தோ்ந்தெடுக்கப்பட்ட வீரா்களை உடற்கல்வி ஆசிரியா்கள் சுரேந்திரன், கிருஷ்ணமூா்த்தி, திருச்செல்வம், சுரேஷ்குமாா், முருகன், பாலசிங், முகேஸ்வரி, மூத்த வீரா்கள் செல்வராஜ், புகழேந்தி , தனசேகா், பொன்ராஜ் ஆகியோா் வாழ்த்தி, மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைத்தனா்.

பயிற்சியாளரும், முன்னாள் இந்திய ஹாக்கி வீரருமான அஸ்வின், அணி மேலாளா் சுரேஷ்குமாா், ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலா் குரு சித்திர சண்முகபாரதி, பொருளாளா் காளிமுத்து பாண்டியராஜா ஆகியோா் கொண்ட தோ்வுக் குழுவினா் வீரா்களை தோ்ந்தெடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com