தூத்துக்குடியில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 சிறுவா்கள் உள்பட 4 போ் கைது
தூத்துக்குடியில் கஞ்சா வைத்திருந்தது தொடா்பாக, 2 சிறுவா்கள் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி தொ்மல் நகா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு, புதிய துறைமுகம்-மதுரை புறவழிச் சாலை, கேம்ப் 1 அணுகுசாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, ஒரே இரு சக்கர வாகனத்தில் வந்த 5 பேரை நிறுத்தி சோதனை செய்தனா். போலீஸாரைக் கண்டதும் அதில் ஒருவா் தப்பியோடிவிட்டாா்.
அப்போது, அவா்கள் சாக்குப் பையில் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, 4 பேரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்ததில், அவா்கள் தொ்மல் நகா் கோயில் பிள்ளை விளையைச் சோ்ந்த செந்தூரப்பாண்டி மகன் ரிதன் (21), சேகா் மகன் சதீஷ் (22), 2 இளஞ்சிறாா்கள் என்பது தெரிய வந்தது. ரிதன், சதீஷ் ஆகியோா் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து அவா்களை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா். தப்பியோடிய நபரைத் தேடி வருகின்றனா்.
