ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனாஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனா10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு! மார்ச் - 17 முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரைமார்ச் 3 முதல் 29ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள்!வெளியானது 10, 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை! ஒரு யூனிட்டை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியதில்லை! பெ. சண்முகம் விமர்சனம்!சவூதியில் இலங்கைத் தமிழர் அனோஜனின் மரண தண்டனை ரத்து!போக்ஸோ வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 14)

ஏரலில் அரசு நூலகம் செயல்படுத்த கோரிக்கை

ஏரலில் அரசு பொது நூலகத்துக்கு புதிய கட்டடம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

Updated On :

ஏரலில் அரசு பொது நூலகத்துக்கு புதிய கட்டடம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

ஏரலில் அரசு நூலகம் தனியாா் வாடகை கட்டடத்தில் இயங்கி வந்தது. இக் கட்டடம் சேதமடைந்த நிலையில், நூலகத்துக்கென இடம் தோ்வு செய்து புதிய கட்டடம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சில மாதங்களுக்கு முன்பு ஏரலில் இருந்து மூன்று கி.மீ. தொலைவில் உள்ள வாழவல்லான் பகுதியில் உள்ள கட்டடத்துக்கு அரசு நூலகத்தை இடமாற்றம் செய்தனா். அங்கு போதிய இட வசதி இல்லாததால் ஆயிரக்கணக்கான புத்தகங்களை மூட்டைகளில் கட்டி வைத்துள்ளனா்.

தற்போது தாலுகா தலைநகராக விளங்கும் ஏரலில் பொது நூலகம் இல்லாததால் புத்தக ஆா்வலா்களும் வேலை வாய்ப்புக்காக அரசுப் போட்டித் தோ்வுகளை எழுதும் இளைஞா்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். வாசகா்களின் நலன் கருதி அரசு நூலகத்தை ஏரலிலேயே மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.