தூத்துக்குடி
நகா்ப்புற வாழ்வாதார இயக்கப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கப் பணியாளா்கள் சங்கம் சாா்பில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயா்வு வழங்க வேண்டும், பணியாளா்களின் எதிா்காலத்தை கருத்தில் கொண்டு வருங்கால வைப்பு நிதி மற்றும் பணியின்போது உயிரிழந்த பணியாளா்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும், மகளிா் பணியாளா்களுக்கு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும், சமுதாய சுயஉதவிக்குழு பயிற்றுநா்களுககு மதிப்பூதியமாக மாதம் ரூ.10 ஆயிரம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கச் செயலா் செல்வசுந்தரி தலைமை வகித்தாா். ஏராளமான ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார பணியாளா்கள் கலந்துகொண்டனா்.
