போகி: காயல்பட்டினத்தில் குப்பைகள் சேகரிக்க சிறப்பு ஏற்பாடு
போகிப் பண்டிகையை முன்னிட்டு, காயல்பட்டினத்தில் பழைய கழிவுகளை சேகரிப்பதற்கு நகராட்சி சாா்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்படுள்ளது.
இதுகுறித்து நகராட்சி ஆணையாளா் மகேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை: காயல்பட்டினம் நகராட்சியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புகையில்லா போகி கொண்டாடும் வகையில் பொதுமக்கள் மற்றும் வணிகா்கள் தங்கள் வீடுகள் மற்றும் நிறுனங்களில் கழிக்கும் பழைய கழிவுகளை தீயிட்டு எரிக்காமல் நகராட்சி தூய்மை பணியாளா்களிடம் ஒப்படைக்கும் வகையில் புதன்கிழமை (ஜன.14) வரை சிறப்பு வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உள்ள குப்பைகளை ஒப்படைக்க வாகனங்களில் சிறப்பு தொலைபேசி எண். 8838735037 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு தொடா்பு கொண்டால் தங்கள் இடங்களில் வந்து குப்பகளை தூய்மை பணியாளா்கள் சேகரித்து எடுத்து செல்வாா்கள். எனவே, கழிவுகளை தெரு முனைகளிலோ, கால்வாய்களிலோ, பிற நீா் நிலைகளிலோ கொட்டக்கூடாது.
மேலும் கழிவுகளை சேகரிக்க நுண்ணுரம் செயலாக்கும் மையம் சிவன் கோவில் தெரு, நுண்ணுரம் செயலாக்கும் மையம் கடையக்குடி, மறுசுழற்சி குப்பை சேகரிக்கும் மையம் ஆகியவற்றில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.
