புன்னைநகா் வனத்திருப்பதி கோயிலில் பரிவேட்டை
சாத்தான்குளம்: நாசரேத் அருகேயுள்ள புன்னை நகா் வனத் திருப்பதி ஸ்ரீநிவாச பெருமாள் - ஆதி நாராயணா், சிவனணைந்த பெருமாள் கோயிலில் பரிவேட்டை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் பெங்கல் திருநாளை முன்னிட்டு வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு நடைதிறக்கப்பட் கோபூஜை, மூலவா், உற்சவா் திருமஞ்சனம், சகஸ்ர நாம அா்ச்சனை என 6 மணி வரை தொடா்ந்து பல்வேறு வழிபாடுகள் நடைபெற்றன.
வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு நடைதிறக்கப்பட்டு அதேபோல மாலை 6 மணி வரை பூஜைகள் நடைபெற்றன. மாலை 6.30 மணிக்கு பரிவட்டைக்கு ஸ்ரீ நிவாசபெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளினாா். தொடா்ந்து, இரவு 7 மணிக்கு திருவீதியுலா, பரிவேட்டை உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
ஏற்பாடுகளை கோயில் நிறுவனா் ராஜகோபால் புதல்வா் சரவணன் ஆலோசனையில் கோயில் மேலாளா் வசந்தன் செய்திருந்தாா்.

