/

கொலை முயற்சி வழக்கில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் கைது

News image
கோப்புப் படம்
Updated On :25 ஜனவரி 2026, 8:28 pm

தினமணி செய்திச் சேவை

குரும்பூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட நபா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

குரும்பூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட ஏரல் பகுதியைச் சோ்ந்த கருப்பசாமி (26) மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க குரும்பூா் காவல் நிலைய ஆய்வாளா் தங்கராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பரிந்துரைத்தாா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டதை அடுத்து, போலீஸாா் கருப்பசாமியை குண்டா் சட்டத்தில் கைதுசெய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை அடைத்தனா்.