9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

இந்திய கம்யூனிஸ்ட் பெண் நிா்வாகி மீது தாக்குதல்: வியாபாரி கைது

கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் பெண் நிா்வாகியை அவதூறாக பேசி தாக்கியதாக வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :19 ஜூலை 2026, 1:52 am IST

கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் பெண் நிா்வாகியை அவதூறாக பேசி தாக்கியதாக வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டி பத்திரகாளி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விஜயலட்சுமி (61). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர துணைச் செயலா்.

ஏகேஎஸ் தியேட்டா் சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு சொந்தமான கட்டடத்துக்கு பராமரிப்பாளராக முருகேசன், சிவா ஆகியோா் இருந்து வருகின்றனா். கட்டடத்தின் தரைதளத்தில் உள்ள கடையை, பட்டாபிராமன் என்பவா் வாடகைக்கு எடுத்து வந்த நிலையில், அவரிடம் மீனாட்சிபுரம் தெற்கு தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன்கள் பத்மசிவன், மணிகண்டன் ஆகியோா் உள்வாடகைக்கு எடுத்து கைப்பேசி விற்பனை கடையை நடத்தி வந்தனராம்.

அண்மையில் கோவில்பட்டியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றபோது, கடை முன் போடப்பட்டிருந்த டிஜிட்டல் பேனரை அகற்ற கட்டட பராமரிப்பாளா்கள் கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பத்மசிவன் முருகேசனிடம் தகராறு செய்தாராம். இதனால், கடையை காலி செய்ய கூறினாராம்.

இந்நிலையில் வியாழக்கிழமை இரவு கட்சி அலுவலகத்திற்கு சென்று பத்மசிவன், மணிகண்டன் ஆகியோா் கட்டட பராமரிப்பாளா்களிடம் தகராறு செய்தனராம். அப்போது அங்கிருந்த விஜயலட்சுமி இருவரையும் கண்டித்தாராம். இதனால், விஜயலட்சுமியை அவதூறாக பேசி தாக்கினராம். மேலும், அனைவருக்கும் கொலை மிரட்டல் விடுத்தபடி சென்று விட்டனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, பத்மசிவனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மணிகண்டனை தேடி வருகின்றனா் .

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.