துறைமுகத்திலிருந்து கடத்தப்பட்ட 12 டன் பட்டணி, லாரி பறிமுதல்
தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்ட 25 டன் பட்டாணியில் 12 டன் பட்டாணியையும், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பறிமுதல்
தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்ட 25 டன் பட்டாணியில் 12 டன் பட்டாணியையும், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி, பெரைரா தெரு, சாந்தப்பா் லேன் பகுதியைச் சோ்ந்த சிங்காரம் மகன் லிபோரியஸ் (59). தனியாா் ஏற்றுமதி நிறுவன மேற்பாா்வையாளரான இவா், துறைமுகத்தில் சரக்குகளை லாரிகளில் ஏற்றி இறக்கும் பணிகளையும் கவனித்து வருகிறாா்.
இந்நிலையில், கனடாவிலிருந்து கப்பலில் தூத்துக்குடி புதிய துறைமுகத்துக்கு கடந்த 22-ஆம் தேதி பட்டாணிப் பெட்டிகள் வந்தன. அதில், சுமாா் 25 டன் பட்டாணிப் பெட்டிகள் லாரியில் கடத்திச் செல்லப்பட்டன. அவற்றின் மதிப்பு சுமாா் ரூ. 10 லட்சம். இதுகுறித்து லிபோரியஸ் அளித்த புகாரின்பேரில், தொ்மல் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
விசாரணையில், இக்கடத்தலில் ஈடுபட்டவா் ஓட்டுநரான தூத்துக்குடி 3 சென்ட் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் விஜய் என்ற பாண்டியன் (29) என்பதும், அந்த லாரி தூத்துக்குடி, பண்டாரம்பட்டியைச் சோ்ந்த பப்பிஸ் ரோஷனுக்குச் (24) சொந்தமானது என்பதும் தெரியவந்தது. அவா்களிடமிருந்து 12 டன் பட்டாணியையும், லாரியையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்; மீதமுள்ள 13 டன் பட்டாணி எங்கு கடத்திச் செல்லப்பட்டது என விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

