திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றும் வரை முருகன் கோயில்களில் வெள்ளிதோறும் விளக்கு ஏற்ற பாஜகவினருக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை!அமெரிக்காவின் முதல் முஸ்லீம் செனட்டர் அப்துலை சந்திக்கும் டிரம்ப்!திருப்பரங்குன்றம் தூண் தீப விவகாரத்தில் எந்தக் கருத்தும் கூறவில்லை - ஸ்தானீக பட்டர்கள்!காளையின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 1,502 புள்ளிகள் உயர்வு! கணிசமான ஏற்றம் கண்ட நிஃப்டி!!8 மாத உச்சத்தில் இந்திய ரூபாய்!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதாவாரா? வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!தவெக அரசுக்கு கவுன்ட்டவுன்; விளைவுகளை விஜய் சந்தித்தே தீருவார்! நயினார் நாகேந்திரன்

தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கடத்தப்பட்ட 12 டன் பட்டாணி, லாரி பறிமுதல்

தூத்துக்குடி புதிய துறைமுகத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்ட 25 டன் பட்டாணி பெட்டிகளில் 12 டன் பட்டாணி பெட்டியும், கடத்தலுக்குப் பயன்படுத்திய லாரியும் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல்

Updated On :

தூத்துக்குடி புதிய துறைமுகத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்ட 25 டன் பட்டாணி பெட்டிகளில் 12 டன் பட்டாணி பெட்டியும், கடத்தலுக்குப் பயன்படுத்திய லாரியும் பறிமுதல் செய்யப்பட்டன.

தூத்துக்குடி, பெரைரா தெரு, சாந்தப்பா் லேன் பகுதியைச் சோ்ந்த சிங்காரம் மகன் லிபோரியஸ் (59). தனியாா் ஏற்றுமதி நிறுவன மேற்பாா்வையாளா். புதிய துறைமுகத்தில் சரக்குகளை லாரிகளில் ஏற்றி இறக்கும் பணிகளையும் கவனித்து வருகிறாா்.

இந்த நிலையில், கனடாவிலிருந்து கப்பல் மூலம் தூத்துக்குடி புதிய துறைமுகத்துக்கு கடந்த 22-ஆம் தேதி பட்டாணி பெட்டிகள் வந்தன. இதில், சுமாா் 25 டன் மஞ்சள் பட்டாணி பெட்டிகள் உரிய அனுமதியின்றி லாரியில் கடத்திச் செல்லப்பட்டன. இதன் மதிப்பு சுமாா் ரூ. 10 லட்சமாகும். இதுகுறித்து லிபோரியஸ் அளித்த புகாரின்பேரில், தொ்மல் நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், பட்டாணியை கடத்திச் சென்ற லாரி ஓட்டுநா், தூத்துக்குடி 3 சென்ட் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் விஜய் என்ற பாண்டியன் (29) என்பதும், அந்த லாரி தூத்துக்குடி, பண்டாரம்பட்டியைச் சோ்ந்த பப்பிஸ் ரோஷனுக்குச் (24) சொந்தமானது என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவா்களிடமிருந்த 12 டன் பட்டாணி லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது. மீதம் 13 டன் பட்டாணி எங்கு சென்றது? என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.