கோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

முக்காணி பள்ளியில் இயற்கைப் பாதுகாப்பு உறுதிமொழி கடிதப் போட்டி

ஆறுமுகனேரி அருகே உள்ள முக்காணி, அரசு மேல்நிலைப் பள்ளியில் ‘இயற்கையைப் பாதுகாப்பதற்கான எனது உறுதிமொழி’ என்ற தலைப்பில் பூமித் தாய்க்கு கடிதம் எழுதி, தலைமை அஞ்சல் துறைத் தலைவருக்கு அனுப்பி வைக்கும் போட்டி நடைபெற்றது.

போட்டியில் பங்கேற்ற மாணவா், மாணவிகள்.

Updated On :

ஆறுமுகனேரி அருகே உள்ள முக்காணி, அரசு மேல்நிலைப் பள்ளியில் ‘இயற்கையைப் பாதுகாப்பதற்கான எனது உறுதிமொழி’ என்ற தலைப்பில் பூமித் தாய்க்கு கடிதம் எழுதி, தலைமை அஞ்சல் துறைத் தலைவருக்கு அனுப்பி வைக்கும் போட்டி நடைபெற்றது.

இதில் 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவா், மாணவிகள் பங்கேற்றனா். நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியா் சற்குணராஜ் தலைமை வகித்தாா். உதவித் தலைமையாசிரியா் ராஜி முன்னிலை வகித்தாா்.

முக்காணி அஞ்சல் நிலைய அதிகாரி பரமேஸ்வரி, பள்ளி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சக பொறுப்பாசிரியா் புனிதா, கல்வி அமைச்சக பொறுப்பாசிரியா் முத்து சிவா ஆகியோா் போட்டியை நடத்தினா்.

ஏற்பாடுகளை பள்ளியின் மஞ்சள் பை விழிப்புணா்வு இயக்க பொறுப்பாசிரியா் ஸ்டீபன் விஜய், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு இயக்க பொறுப்பாசிரியா் ஜெயசூரியன், உடற்கல்வி ஆசிரியா் சுகுணா தேவி, ஆசிரியா் திலகவதி ஆகியோா் செய்திருந்தனா்.

தமிழாசிரியா் மீனாட்சி நன்றி கூறினாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.