
தூத்துக்குடி வைகுண்டபதி கோயிலில் குருவாயூரப்பன் அலங்காரத்தில் பெருமாள்!
புரட்டாசி 2ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு, தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில் பெருமாள் குருவாயூரப்பன் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

குருவாயூரப்பன் அலங்காரத்தில் அருள்பாலித்த பெருமாளுக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனை.
புரட்டாசி 2ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு, தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில் பெருமாள் குருவாயூரப்பன் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இதையொட்டி, கோ பூஜை, விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. தொடா்ந்து, குருவாயூரப்பன், சீனிவாசப்பெருமாள் அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாளுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது.
சீனிவாசப்பெருமாள், ஆஞ்சனேயருக்கு பக்தா்கள் துளசி, வெற்றிலை மாலைகள் சாத்தி வழிபட்டனா். அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். அவா்களுக்கு பால் பாயசம், அரவணை உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் செந்தில்குமாா் தலைமையில் கோயில் நிா்வாகத்தினா் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






