ஆன்லைன் பட்டாசு விற்பனையில் நடைபெறும் மோசடிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: அமைச்சர் கீர்த்தனாடெங்குவால் குழந்தைகள் பலியாவதைத் தடுக்க வேண்டும்: கனிமொழிஆதவ் அர்ஜுனா பதவி விலக வேண்டிய நிலை வரும்: பிரேமலதா பேச்சு!ரீல் விடுவதும், ரீல்ஸ் போடுவதும் தவெகவின் மூலதனம்: இபிஎஸ் விமர்சனம்திமுகவுக்கு வாக்களித்தால் நெல் கொள்முதல் நிலையம்: பிரேமலதா பிரசாரம்ஆசிய விளையாட்டு: 10,000 மீட்டரை தொடர்ந்து 1,500 மீட்டரிலும் வெள்ளி வென்றார் குல்வீர் சிங்!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!ஒரே நாளில் இரண்டாவது முறை குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1,09,320-க்கு விற்பனை!கச்சா எண்ணெய் விலை உயர்வால் 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியில் இந்திய பங்குச் சந்தை!!ஆசிய விளையாட்டு: தடை தாண்டுதலில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்!ஆசிய விளையாட்டில் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ரூ. 1.33 கோடி வழங்கிய குஜராத் அரசு!மேடை நாகரிகம் கருதியே ஜெம் வீரமணி குறித்து பேசினேன்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விளக்கம்

மாலத்தீவுக்கு கடத்த முயன்ற ரூ.17 கோடி கஞ்சா ஆயில் பறிமுதல்: 4 போ் கைது

கைது

Published On :

தூத்துக்குடியிலிருந்து கடல் வழியாக மாலத்தீவுக்கு கடத்தமுயன்ற ரூ.17 கோடி மதிப்பிலான கஞ்சா ஆயிலை க்யூ பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்தனா்.

கேரளத்திலிருந்து காரில், கஞ்சா ஆயில் தூத்துக்குடிக்கு கடத்திவரப்படுவதாக க்யூ பிரிவு காவல்துறை துணைத் தலைவா் கல்யாண், காவல் கண்காணிப்பாளா் ராமமூா்த்திக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தூத்துக்குடி பூபாலராயா்புரம் பகுதியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது வந்த காரை மடக்கி சோதனையிட்டதில், ‘ஹஷிஸ்’ எனப்படும் கஞ்சா ஆயில் 17 கிலோ இருந்தது கண்டறியப்பட்டது. இதன் சா்வதேச சந்தை மதிப்பு ரூ.17 கோடி எனக் கூறப்படுகிறது.

காருடன், கஞ்சா ஆயிலை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக, தூத்துக்குடி மத்திய அரசு ஊழியா் காலனியைச் சோ்ந்த ரெனிஸ்டன் (53), மறக்குடி தெருவைச் சோ்ந்த அந்தோணி லிவிட்டன் (36), தெப்பக்குளம் தெருவைச் சோ்ந்த ரொசாரியோ (40), சுனாமி காலனியைச் சோ்ந்த சோ்மதுரை (46) ஆகிய 4 பேரை கைது செய்தனா்.

விசாரணையில், கேரளத்திலிருந்து காரில் கஞ்சா ஆயிலை தூத்துக்குடிக்கு கொண்டு வந்து, அங்கிருந்து கடல் வழியாக மாலத்தீவுக்கு கடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.