சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
மன்னார்குடி,ஜன. 8: ஜேசி ராஜமன்னார்குடி, போக்குவரத்து காவல் துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு, போக்குவரத்து விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு மன்னார்குடி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு


மன்னார்குடி,ஜன. 8: ஜேசி ராஜமன்னார்குடி, போக்குவரத்து காவல் துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு, போக்குவரத்து விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு மன்னார்குடி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சிக்கு ஜேசி கிளைத் தலைவர் எஸ். ஞானசேகரன் தலைமை வகித்தார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக காவல் துணைக் கண்காணிப்பாளர் இரா. குணசேகரன் கலந்து கொண்டு, போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விளம்பரத் தட்டிகளை நகரின் முக்கிய இடங்களில் திறந்து வைத்தும், வாகனங்களின் முகப்பு விளக்கில் கறுப்பு வில்லைகள் ஒட்டுதல், விழிப்புணர்வு பிரசுரம் விநியோகம், தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து மோட்டார் சைக்கிள் பேரணி உள்ளிட்டவற்றை துவக்கி வைத்தார்.
இதில் காவல் ஆய்வாளர் இரா. ரஞ்சித் சிங், அமைப்பின் மண்டல இயக்குநர் எஸ்.கே. தம்பிதுரை, முன்னாள் மண்டல துணைத் தலைவர் கே. வெங்கடேஷ்,திட்ட இயக்குநர் கே. கோபால் மண்டல பயிற்றுநர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...