வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

தடுமாற்றத்தில் அரசு உதவி பெறும் கல்லூரிகள்

திருச்சி, ஏப். 8: பேராசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக அரசு உதவிபெறும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித்திறன் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் இப்போது 133 அரசு உதவிபெறும் கலை,

Updated On :19 செப்டம்பர் 2012, 10:32 pm

திருச்சி, ஏப். 8: பேராசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக அரசு உதவிபெறும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித்திறன் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இப்போது 133 அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. ஒவ்வொரு கல்லூரியிலும் 10 முதல் 30 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு உதவிபெறும் கல்லூரிகளிலும் ஏறத்தாழ 2,000 பேராசிரியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை.

அரசு உதவிபெறும் கல்லூரிகளில் படிப்பவர்களில் ஏறத்தாழ 90 சதம் பேர் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள். இந்தக் கல்லூரிகளில் பல பாடப்பிரிவுகளில் போதிய எண்ணிக்கையில் பேராசிரியர்கள் இல்லாததால், பாடங்களில் அடிப்படை விஷயங்களை கற்றுக்கொள்ளகூட மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.

மாணவர்கள் மீது அக்கறை கொண்ட சில கல்லூரிகள் மட்டும், தாற்காலிக அடிப்படையில் பேராசிரியர்களை நியமித்து, சொந்த நிதியில் இருந்து ஊதியம் அளிக்கின்றன.

கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலக வாசலில் இந்த கல்வி நிறுவனங்கள் பல ஆண்டுகளாக காத்துக்கிடந்தாலும் பேராசிரியர் பணி நியமனத்துக்கு அனுமதி கிடைப்பதில்லை.

தமிழகத்தில் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பெரும்பாலானவை நிர்வாகச் சீர்கேடுகளால் மாணவர்கள் நலனில் கவனம் செலுத்துவதில்லை. இத்தகைய கல்லூரிகள், இருக்கும் பேராசிரியர்களை கொண்டு வேலை நாள்களை கழித்துக்கொண்டிருக்கின்றன. அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்கள் பல்கலைக்கழக தேர்வுகளில் சராசரியாக 70 சதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெறுகின்றனர்.

தரமான கல்வியால்தான், திறமையான மாணவர்களை உருவாக்க முடியும். பட்டம் பெறுபவர்கள் பல ஆயிரம் பேர் இருந்தாலும், பல நிறுவனங்கள் திறமையான மாணவர்களை தேடிக்கொண்டிருக்கின்றன என்பதே மறுக்க முடியாத உண்மை.

நிர்வாகம், ஆட்சிப்பணி போன்ற உயர் பொறுப்புகளில் உள்ள பெரும்பாலானவர்கள் கலை பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள்தான்.

பல ஆட்சிப்பணி அதிகாரிகளை உருவாக்கிய பெருமை கொண்ட கலைக்கல்லூரிகள் இப்போது அந்தப் பெருமையை இழந்து வருகின்றன.

திறமையான மாணவர்கள் உருவாக்கப்படாததாலேயே, இந்தக் கல்லூரிகள் சேர்த்துவைத்த பெருமையை இழக்கும் நிலை உருவாகியுள்ளது.

ஆராய்ச்சி படிப்பை முடித்துவிட்டு, தனியார் கல்லூரிகளில் மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் சாதனையாளர்களுக்கு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் வாய்ப்பு வழங்கப்படும் பட்சத்தில் இங்கு படிக்கும் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கும். மேலும், அந்த கல்லூரிகள் இழந்த பெருமையை மீட்கவும் முடியும்.

வளர்ச்சிப் பணிகளுக்கான மொத்த நிதியில் ஏறத்தாழ 75 சதம் அளவு கல்வி வளர்ச்சிக்கு ஒதுக்கீடு செய்வதாக மத்திய, மாநில அரசுகள் பெருமைபட்டுக் கொள்கின்றன.

உயர்கல்வி கனவோடு காத்திருக்கும் ஏழை மாணவர்களுக்கு, அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில், காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும். அப்போதுதான் கல்விக்கென ஒதுக்கும் நிதி, முழுமையான பயனை அளிக்கும் என்பதை அரசு உணர வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.