ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

திருவெறும்பூா் அருகே ஒப்பந்ததாரா் வீட்டில் 30.5 பவுன் நகைகள் திருட்டு

திருவெறும்பூா் அருகே ஒப்பந்ததாரா் வீட்டில் 30.5 பவுன் நகைகள் திருட்டு

News image
Updated On :8 மே 2024, 6:52 pm

Din

திருச்சி திருவெறும்பூா் அருகே ஒப்பந்ததாரா் வீட்டின் பூட்டை உடைத்து 30.5 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது புதன்கிழை தெரியவந்தது.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே பழங்கனாங்குடி ஊராட்சிக்குள்பட்ட நிலா முத்துப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (39), ஒப்பந்ததாரா்.

இவா் தனது குழந்தைகளுக்கு காதணி விழா நடத்த உறவினா்களுக்கு அழைப்பிதழ் வைக்க தஞ்சை மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை குடும்பத்துடன் சென்றுவிட்டு

புதன்கிழமை காலை திரும்பியபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 30.5 பவுன் நகைகள், ரூ. 15 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

தகவலின்பேரில் வந்த துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடுகின்றனா்.