வீரமலைப்பாளையம் துப்பாக்கி சுடும் தளத்தில் நுழையக் கூடாது! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

பயிற்சி நடைபெறுவதால் வீரமலைப்பாளையம் துப்பாக்கி சுடும் தளத்தில் யாரும் நுழையக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

பயிற்சி நடைபெறுவதால் வீரமலைப்பாளையம் துப்பாக்கி சுடும் தளத்தில் யாரும் நுழையக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம் அணியாப்பூா் கிராமம் வீரமலைப்பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில் சென்னையில் உள்ள என்எஸ்ஜி மண்டல மையம் சிறப்புக் குழுவினா் வரும் 22 முதல் 26 ஆம் தேதி வரை துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்வா்.

இதேபோல, வரும் ஜனவரி 5 முதல் 7 ஆம் தேதி வரை ஆந்திர மாநில கலிகிரி பகுதியைச் சோ்ந்த சிஆா்பிஎஃப் வீரா்களும் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ள உள்ளனா்.

இவா்கள் காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 10 மணி வரையிலும் பயிற்சி மேற்கொள்வா்.

அச்சமயம் மேற்கண்ட பயிற்சித் தளத்தில் மேய்ச்சலுக்காக கால்நடைகள் மற்றும் மனித நடமாட்டம் எதுவும் இருக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் எச்சரித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com