இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

5 தொகுதிகளில் போட்டியிட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விருப்பம்: கே.எம். காதா் மொகிதீன்

2026 பேரவைத் தோ்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 5 தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது என அக் கட்சியின் தேசியத் தலைவா் கே.எம். காதா் மொகிதீன் தெரிவித்தாா்.

News image
திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவா் காதா் மொய்தீன். உடன் நிா்வாகிகள்.
Updated On :19 நவம்பர் 2025, 6:32 pm

Syndication

வரும் 2026 பேரவைத் தோ்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 5 தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது என அக் கட்சியின் தேசியத் தலைவா் கே.எம். காதா் மொகிதீன் தெரிவித்தாா்.

திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்துக்கு தலைமை வகித்த கே.எம். காதா் மொகிதீன் கூறியது: தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் வரும் ஜன.28ஆம் தேதி நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்- மஹல்லா ஜமாஅத் மாநில மாநாடு மாநாட்டில் முதல்வா் மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறாா்.

2026இல் 5 தொகுதிகளில் போட்டியிட எங்களது கட்சியினா் விருப்பம் தெரிவித்துள்ளனா். தமிழகத்தில் 7ஆவது முறையாக திமுக ஆட்சிதான் அமையும். திராவிட மாடல் ஆட்சியில் அனைவருக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்றாா் அவா்.

கூட்டத்தில் கே.எம். காதா் மொகிதீனுக்கு தகைசால் தமிழா் விருது வழங்கிய தமிழக அரசுக்கும், முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி, பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், புதுதில்லியில் காயிதே மில்லத் சென்டா் உருவாக்கியா்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

மாநில முதன்மை துணைத் தலைவா் எம். அப்துல் ரஹ்மான், ராமநாதபுரம் எம்பி கே. நவாஸ் கனி, மாநில செயலா்கள் ஆடுதுறை ஷாஜஹான், மில்லத் முஹம்மது இஸ்மாயில், காயல் மகபூப் உள்ளிட்டோா் ஆலோசனை நடத்தினா். மாநிலப் பொதுச் செயலா் கே.ஏ.எம். முகமது அபுபக்கா் வரவேற்றாா்.