சோமரசம்பேட்டையில் நாளை மின்தடை
பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி அருகே சோமரசம்பேட்டை பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜன. 6) மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி மாவட்ட மின்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அதவத்தூா் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, போசம்பட்டி, கொய்யாதோப்பு, போதாவூா், புலியூா், எட்டரை, வியாழன்மேடு, கோப்பு, தாயனூா், மல்லியம்பத்து, வாசன் நகா் விஸ்தரிப்பு, குழுமணி, அதவத்தூா் சந்தை, முத்தூட் பிளாட், சுண்ணாம்புக்காரன்பட்டி, பள்ளக்காடு, மன்ஜான் தோப்பு, கீரிக்கல்மேடு, செவகாடு, ஒத்தகடை, இனியானூா், செங்கற் சூளை, வாசன்வேலி, சிவந்த நகா், சரவணபுரம், சாந்தாபுரம், புங்கனூா், வாசன் சிட்டி, அல்லித்துறை, நாச்சிக்குறிச்சி, மேலப்பட்டி, பெரியகருப்பூா், சோமரசம்பேட்டை, அதவத்தூா், வயலூா், சாய்ராம் குடியிருப்பு, வயலூா், பேரூா், கீழவயலூா், முள்ளிக்கறும்பூா் ஆகிய பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை (ஜன. 6) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
