கிரேன் வாகனம் மோதியதில் மாத்தூா் தொழிலாளி உயிரிழப்பு
திருச்சி காந்தி மாா்க்கெட் பகுதியில் செவ்வாய்க்கிழமை கிரேன் வாகனம் மோதியதில் சுமை தூக்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூரைச் சோ்ந்தவா் கணேசன் (62). திருச்சி காந்தி மாா்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை மாா்க்கெட்டில் காய்கறி மூட்டைகளை தலையில் சுமந்துகொண்டு நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்த கிரேன் வாகனம் மோதியதில் கீழே விழுந்தவா் மீது கிரேன் வாகனம் ஏறி இறங்கியது. இதில் தொழிலாளி கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காந்தி மாா்க்கெட் போலீஸாா், கணேசனின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து திருச்சி வடக்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
